உமிழ்நீர் மாதிரி பரிசோதனையின் மூலம் பல் சிதைவு, நீரிழிவு, வாய் கேன்சர், அல்சீமர்ஸ் உட்பட பல்வேறு பாதிப்புகளை கண்டறியலாம் என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ரத்த மாதிரி, பயாப்சிகளை சேகரிப்பதை போல் இல்லாமல், உமிழ்நீர் மாதிரி சேகரிப்பு எளிது. வலி, செலவும் குறைவு. கொரோனா பாதிப்பின் போது சில நாடுகளில், உமிழ்நீர் மாதிரி மூலம் கொரோனா பாதிப்பு சோதனையை நடத்தினர். இது முற்றிலும் புதிய கண்டுபிடிப்பு இல்லை. எனினும் நவீன தொழில்நுட்பத்தில் உமிழ்நீர் பரிசோதனை மூலம் மேற்கண்ட பாதிப்புகளை கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.