டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மக்கள் நல்வாழ்வு துறையில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு.
* பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்கள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘பயங்கரவாதத்திற்கு அதன் சகோதரி மூலம் பாடம் புகட்டிய பிரதமர்’; பா.ஜ.க அமைச்சர் பேச்சால் சர்ச்சை. “மத்திய பிரதேச பா.ஜ.க அரசின் அமைச்சர், நமது துணிச்சலான மகள் கர்னல் சோபியா குரேஷி பற்றி மிகவும் அவமானகரமான, வெட்கக்கேடான மற்றும் ஆபாசமான கருத்துகளை கூறியுள்ளார், ஷாவை பிரதமர் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
* அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை: கோவை சிபிஅய் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
– குடந்தை கருணா