சென்னை. மே 14- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கனிமொழி எம்.பி.
பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் கொடுமைகள் அனைத்தும் நம் மனதிலே காயமாக இத்தனை ஆண்டுகள் இருந்தன. இன்று வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு, அந்த காயத்துக்கு மருந்திடும் ஒன்றாக, அந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் ஒன்றாக, குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை மூலம் சரியான தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் இந்த வழக்கை விசாரிக்க முடியாமல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்தனர். ஆனால், தி.மு.க மற்றும் கூட்டணி;f கட்சிகள் இணைந்து இந்த வழக்கை சி.பி.அய்.க்கு மாற்ற வேண்டும் என்று கூறி வந்தனர். அதன் அடிப்படையில், சி.பி.அய். விசாரணைக்கு மாற்றம் செய்யப் பட்டு தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பாலியல் குற்றங்களுக்கு எந்தக் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. இன்று அ.தி.மு.க வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த தீர்ப்பு வரவேற்கப் பட வேண்டிய நல்ல தீர்ப்பு.
தொல்.திருமாவளவன்
இந்தியாவில் மோசமான சம்பவமாக பொள்ளாச்சி பாலியல் வன்முறை நடந்துள்ளது சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் தான் கூட்டுப்பாலியலில் ஈடுபடுபவர் களுக்கு ஒரு அச்சம் ஏற்படும்.
அதன்படி, பொள்ளாச்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து. இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறக்கூடாது. அதற்கு இது போன்ற தீர்ப்புகள் உதவும். இந்த தீர்ப்பை வரவேற்கி றேன்.
இரா.முத்தரசன்
பாலின சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற் கிறோம். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.
பெ.சண்முகம்
பெண்களுக்கும், குழந்தை களுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் மனித சமூகத்திற்கு இழிவானது. பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள் பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.