கழகத் தலைவர் பாராட்டு!
வேலுார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (VIT) நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் அவர்களுக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 9-ஆம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மேலாண்மை கல்வியை விரிவுபடுத்துவதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் காட்டும் அர்ப்பணிப்புக்காக வி.அய்.டி., வேந்தர் விசுவநாதன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு, அமெரிக்காவில் மூன்றாவது முறையாக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற சிறப்பையும் அவருக்குத் தருகிறது.
திராவிட இயக்கப் பற்றுடன் சமூகநீதியில் அக்கறை கொண்ட பகுத்தறிவாளர் – தமிழ்ப் பற்றுடன் தமிழியக்கம் நடத்துபவர். வி.அய்.டி. வேந்தர் அவர்களுக்கு நமது வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்