வலது மார்பு, சில வேளைகளில் வலது தோள்பட்டை வழியாக முதுகுப்புறமும் வலி கீழ்நோக்கிப் பரவும். இந்தவிதமான பித்தப்பை வலி சில நிமிடங்களிலிருந்து சில மணி நேரம் மிகவும் வலுவாகத் தாக்கும் வலியிலிருந்து விடுபட முடியாது. சில சமயம் குடலைப் புரட்டிக் கொண்டு வருவது போல் தோன்றும். வாந்தியும் வரலாம்.
பித்தப்பை என்பது ஒரு சிறிய பேரிக்காய் வடிவில் உள்ள பை, கல்லீரலின் அடிப்புறம் ஒட்டிக் கொண்டிருக்கும். இது முழுவதும் பித்த நீரால் நிரம்பி இருக்கும். செரிமானத்திற்குத் தேவைப்படும் போது குடலினுள் செலுத்தப்படும். 95 சதவிகித கற்கள் பித்தநீர் பூரண கரைசல் ஆகும்போது கொலஸ்டிரால் படிமங்களாக மாறுகிறது. இவை இறுகிய சிறு சிறு ரவை குண்டுகள் போல், சிறு மணல்போல் அல்லது மிகப் பெரிய (2.5 செ.மீ) 1 அங்குலம் விட்டம் உள்ள கற்களாகக் காணப்படும். 80 சதவிகித நேரங்களில் இக்கற்கள் தீங்கற்றவை.
எளிதில் கண்டுபிடிக்கப்படாமல் போகிறது. சில சமயங்களில் பித்தப்பை, பித்த நீரை வெளியேற்றச் சுருங்கும் போது கல் இறங்கி வந்து பித்தநீர்க் குழாய்க்குள் சென்று அங்குத் தங்கும். இப்பொழுது மஞ்சட் காமாலை தோன்றும். பித்தப்பை அழற்சியின் பொழுது கல்லுடன், பித்தப்பையையும் நீக்க வேண்டி வரும். பித்தக் கற்கள் வயதானோரிடம், முக்கியமாக பெண்களில் அதுவும் உடல் பருமனான பெண்களில் ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாகக் காணப்படும். பரம்பரையாகவும் இது தோன்றலாம்.
சில மனிதர்களிடையே மிகவும் எளிதில் உண்டாகிறது. இந்தப் பித்தக் கற்கள். உணவே இந்த வேறுபாட்டினை உண்டாக்குகிறது. கற்கள் உண்டாவது அதிகமாகவதும், குறைவதும் நாம் என்ன உண்ணுகிறோமோ அதைப் பொறுத்தது. பித்த நீரில் அதிக அளவு கொலஸ்டிரால் காணப்படுவதே கற்கள் உண்டாக முக்கியக் காரணம். சில உணவுகள், கொலஸ்டிராலைக் கரைக்கக் கூடிய கரைப்பான் போல் காணப்படும். சில சமயம் உணவு பித்தப்பையைச் சுருங்க வைத்தலை ஒழுங்குபடுத்திக் கற்களைப் பித்த வடிகுழாயினுள் தள்ளிப் பித்தப்பை வலியை உண்டாக்கும்.
காய்கறிகள் எதிர் மருந்து
பித்தக்கற்கள் உண்டாகாமல் இருப்பதற்கும், பித்தப்பை வலியைத் தவிர்க்கவும் அதிகமாகக் காய்கறிகளையும் உண்ணுங்கள். காய்கறிகளில் உள்ள ஏதோ அறியப்படாத ஒன்று பித்தக் கற்கள் உண்டாகாமல் தடுக்கிறது.
பெண்கள் அதிகமான கொட்டை, பீன்ஸ், லென்டில், பட்டாணி மற்றும் ஆரஞ்சு உண்பவர்களுக்குப் பித்தப்பை வலி வருவதில்லை. அவர்களுக்கு ஓர் எதிர்ப்பு சக்தி உள்ளது.
பித்தக் கல் வராமல் தடுக்க
என்ன உண்ணவேண்டும்?
என்ன உண்ணவேண்டும்?
அதிகமாகக் காய்கறிகளை உண்ணுங்கள். முக்கியமாகப் பட்டாணி வகைகள்
சர்க்கரையைப் பற்றிக் கவலை இல்லை.
அதிக பட்டினி நிலை இருக்கக் கூடாது. முக்கியமாகக் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
அதிகமான எடை இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும். மிக வேகமாக எடை குறைந்தால் பித்தக்கல் உண்டாகும். அன்றாடம் 2 ஸ்பூன் வர்ஜின் ஆலிவ் எண்ணெயைக் குடிக்க வேண்டும்.
அதிக அளவு புரதம் வேண்டாம். நோய் நிலையில் வறுத்த உணவு, கொழுப்பு உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இந்நிலையில் வைட்டமின் ஏ.பி.ஈ.கே உள்ள மாத்திரையைக் கொடுக்க வேண்டும். முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதைத் தூண்டி, பித்தப்பைப் பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.
கொழுப்புசத்து மிகுந்த உணவுகளைத் தவிர்க்கவும். எண்ணெய் நிறைந்த அல்லது வறுத்த உணவுகளைப் பித்தக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவுப் பொருட்கள் பித்தப்பையைக் கடினமான வேலை செய்யக் கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று அந்தக் கற்கள் பித்தநீர்ப் பைக்குத் தடையை ஏற்படுத்தலாம்.
சனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உண்மையில் பித்தப்பைக் கற்களைத் தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.
பருப்பு வகைகள்
குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் (காளா) வகைகளைச் சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா -3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து பித்தக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடிரேட் உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும். உருளைக் கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும் அவை பித்தப்பைக் கற்களை உருவாக்கும்.
ஒவ்வொரு நாளும் ஒரு கப் காப்பி குடித்தால், பித்தப் பையில் உள்ள கொழுப்பின் அளவினைக் குறைத்து, பித்தக் கற்களைத் தடுத்துவிடும்.
பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப் பையில் கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
நீரில் கரையக்கூடிய நார்ச் சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இயற்கையாகப் பித்தப் பையில் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பை கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையைக் குறைக்கும் போது படிப்படியாக மெதுவாகக் குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களைத் தடுக்கலாம்.