திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்ட அவைத் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தி.அ.முகமது சகி அவர்களின் தம்பி
யும், வேலூர் மாநகராட்சியின் மேனாள் துணை மேயருமான வழக்குரைஞர் தி.அ.முகமது சாதிக் அவர்கள் 09.05.2025 அன்று இரவு விபத்து ஒன்றில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் அதிர்ச்சியுற்றோம். திராவிட இயக்க உணர்வில் திளைத்த குடும்பம். நம் மீதும் இயக்கத்தின் மீதும் பேரன்பும், அக்கறையும் கொண்டவர்கள் அய்யா முகமது சகி, முகமது சாதிக் சகோதரர்கள். தோழர் முகமது சாதிக் அவர்களின் எதிர்பாராத மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங் கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
(குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசி வாயிலாக முகமது சகி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் உள்ளிட்ட தோழர்கள் நேரில் இறுதிமரியாதை செலுத்தினர்.)