சாக்கோட்டை க.அன்பழகனின் சகோதரர் க.உண்மை மறைவு – தமிழர் தலைவர் ஆறுதல்

Viduthalai
1 Min Read

அரசியல்

கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனின் இளைய சகோதரர் க.உண்மை நேற்று (28.6.2023)  பகல் 12 மணியளவில் மறைவுற்றார்.  திராவிட இயக்க வீரர் க. உண்மை – மறைவுச் செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், சாக்கோட்டை அன்பழகன் அவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.  க. உண்மையின் தந்தையார், “சுயமரியாதைச் சுடரொளி” சாக்கோட்டை கணபதி தனது மகன்களுக்கு பெர்னாட்ஷா, ஆனந்தம், திராவிட அரசு, அன்பழகன், உண்மை என்று சுயமரியாதை இயக்கத் தொடர்புடைய பெயர்களை வைத் திருப்பதை நினைவு கூர்ந்தும் சாக்கோட்டை அன்பழகனிடம் ஆறுதலைத் தெரிவித்தார் தமிழர் தலைவர் அவர்கள்.

குறிப்பு: க.உண்மை அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று (29.6.2023) மாலை நடைபெற்றது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *