தமிழ்நாடு மீனவர்கள் அதிர்ச்சி
கொழும்பு, மே 11 எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளி யிடப்பட்டு வருகிறது
அந்த செய்தியின்படி, 2020-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை 2-ஆவது முறையாக ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு தற்போது அறி வித்துள்ளது.
அதன்படி, ராமேசுவரம் மீனவர்களின் 31 படகுகள், புதுக்கோட்டை மீனவர்களின் 14 படகுகள், கன்னியாகுமரி மீனவர்களின் 8 படகுகள், நாகை மீனவர்களின் 3 படகுகள், காரைக்கால் மீனவர் களின் 5 படகுகள் உள்ளிட்ட 67 படகுகளை ஏலம் விட உள்ளதாக இலங்கை நீரியல் வளத் துறை தெரிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் தங்களின் பட குகளை மீட்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு பதில் அளித்து வரும் நிலையில், பறிமுதல் செய் யப்பட்ட படகுகள் ஏலம் விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுத்து நிறுத்தி, தங்களது படகுகளை மீட்டுத் தந்து, வாழ்வாதாரத்தைப் பாதுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.