வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஜூன் 29 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1.1.2024-அய் தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள் ஜூலை 21-ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி வரை வீடு தோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஆகஸ்டு மாதம் 22-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி வரை வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல், மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, குறிப்பிடத்தகுந்த மற்றும் மனித ரல்லாத படங்களை மாற்றி நல்ல தரமான ஒளிப் படங்களை உறுதி செய்தல் போன்ற பணிகள் மேற் கொள்ளப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 17-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது. 1.1.2024, 1.4.2024, 1.7.2024 மற்றும் 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ விண்ணப்ப படிவத்தை அளிக்கலாம். இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று வாக்காளர் அட்டை பெற வேண்டியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *