10.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
< பாகிஸ்தானுக்கு எதிராக போராடும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி.
< அதிமுக ஆட்சியில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
< ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு உருவாகி வரும் நிலைமை குறித்து” தொலைக்காட்சி சேனல்கள் பாக். பிரச்சினையை வகுப்புவாதம் ஆக்குகின்றன, சரிபார்க்கப்படாத கூற்றுகளைப் பரப்புகின்றன, போர் வெறியை ஊக்குவிக்கின்றன; இந்த சேனல்களை கட்டுப்படுத்துங்கள், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, ஒன்றிய தகவல் ஒளிபரப்பு அமைச்சருக்கு கடிதம்.
< கருநாடக அமைச்சரவை இன்று பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கீடு விகிதத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்க உள்ளது
தி டெலிகிராப்:
< ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆபரேஷன் சிந்தூருக்காக “ஒன்றிய அரசுத் தலைமையை” பாராட்டினார், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி எந்தக் குறிப்பையும் தவிர்த்தார். பாஜக தலைவர் நியமனம்; மோடி-அமித்ஷாவுக்கு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது, ஆர்.எஸ்.எஸ். பிடிவாதம்.
– குடந்தை கருணா