சென்னை, மே9– சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சத்யநாரா யணபிரசாத் 6.5.2025 அன்று இரவு திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சமூகநீதியில் நம்பிக்கையும் பற்றும் கொண்ட நீதிபதி சத்யநாராயண பிரசாத் எளிய மக்களுக்கான நீதி பதியாகத் திகழ்ந்தார். அவரது மறைவிற்கு திராவிடர்கழகத்தின் சார்பாக, வழக்குரைஞ ரணித் தலைவர் வழக்குரைஞர் வீரசேக ரன், பிரச்சாரச் செய லாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த் தினி, வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை, வழக்குரை ஞர் துரை அருண், வழக்குரைஞர் வேலவன் ஆகியோர் நேரில் சென்று மரியாதை செலுத்தி, மறைந்த நீதிபதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். 7.5.2025 அன்று மாலை அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.