கிருட்டினகிரி, மே 7– கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் மோரனஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.சிவசங்கர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மு.கா. சித்ரா, இளவரசு, ஜாய்ஸ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக புரட்சி கவிஞர் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் பள்ளியின் தலை மையாசிரியர் மா.சிவசங்கர் பேசியதாவது:, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள், தமிழ் மொழிப் பற்று, தமிழின் சிறப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம், பெண் விடுதலை, பெண்கல்வி, கைம்பெண் மறுமணம். தொழிலாளர் விடுதலை, சமூகநீதி, சமத்துவ சிந்தனை உள்ளிட்ட புரட்சிக் கவிஞர் அவர்களின் அரும் பெரும்பணிகளை தலைமை ஆசிரியர் விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தமிழாசிரியர் மங்கம்மாள் நன்றி யுரையாற்றினார்.