தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முதல் நிலை பேரூராட்சி முதன்மைச் சாலையில் மக்கள் அதிகம் கூடும் போக்குவரத்திற்கு நெருக்கடியான இடத்தில் திடீரென நெடுஞ்சாலைத்துறையின் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு கோவில் கட்டுமான ஆரம்ப நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், பொது நல அமைப்புகளும் சேர்ந்து நெடுஞ்சாலைத் துறையில் மனு கொடுத்து கோவில் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த 01.5.2025 அன்று இரவு திடீரென கோயில் கட்டப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்துவதற்கு முன்பு கோவில் அகற்றப்படுமா?