அருமைத் தோழர்களே,
வரும் 10,11–5–2025 சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னை பெரியார் திடலில் கழகக் கலந்துரை யாடல் கூட்டங்கள் (அருகில் காண்க) கழகத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளன.
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதுபோலவே, 11.5.2025 ஞாயிறு காலை சரியாக 10 மணிக்கு நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகக் கூட்டத்திலும் இளைஞரணி மாநிலப் பொறுப்பாளர்களும், இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர்களும், மாணவர் கழக மாநில பொறுப்பாளர்களும், மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்களும் தவறாது பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடை பெறவிருக்கும் மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடல்களிலும், மாநிலப் பொறுப் பாளர்களும், மாநில துணைச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவை மிக முக்கியமான கலந்துரையாடல்கள் ஆனதால் தவறாது வருகை தரக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
– கலி. பூங்குன்றன்
சென்னை துணைத் தலைவர் 5.5.2025 திராவிடர் கழகம்
குறிப்பு: தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், கலை மற்றும் கலை – இலக்கிய அணி மாநிலப் பொறுப்பாளர்களும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.