திருநெல்வேலி, மே 5- திருநெல்வேலி –தென்கலத் தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா 4.5.2025 அன்று காலை 11மணிக்கு மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை யில் எழுச்சியோடு நடைபெற்றது.
தென்கலம் கழகத்தலைவர் வா.அய்யப்பன் வரவேற் புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் இரா.வேல்முருகன் தொடக்கவுரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்திட்ட பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆவடிநகரசெயலாளர் தமிழ்மணி, ஓய்வுபெற்ற வங்கி அலுவலர் இராசன், இலக்குமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன் பங்கேற்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள் உருவாக்கிய தாக் கத்தையும், அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் பேச்சுகளை கவிதையாக படைத்து இனமான உணர்ச்சி யூட்டியதையும்விளக்கி உரையாற்றினார்.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன் ஓராண்டு சந்தா ரூ.2,000 வழங்கி மகிழ்ந்தார்.தென்கலம் கழக செயலாளர் கு.வெள்ளத்துரை நன்றி கூறினார். நிகழ்வில் காப்பாளர் இரா.காசிக்கு பயனாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்டக்கழக துணைச் செயலாளர் மாரி.கணேசு, மாவட்ட இளைஞரணி செயலாளர்மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவர்கழக செயலாளர்செ.சூர்யா, பாளை பகுதி தலைவர் பாலகிருட்டிணன், தச்சை பகுதி தலைவர் இரா.கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநகர செயலாளர் முரசொலி முருகன் துணைச் செயலாளர் ஜார்ஜ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.