தருமபுரி, மே 5 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சமூக நல்லிணக்க மேடை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன் தலைமை வகித்தார்.மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் என்.சுபேதார் வரவேற்றார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார் மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன்,திமுக நகர செயலாளர் நாட்டான்மாது,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் த.கு.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்
எஸ்.கலைசெல்வன், மதிமுக மாவட்ட செயலாளர் கோ.ராமதாஸ்,சமூக நல்லிணக்க மேடை ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் இ.பி.பெருமாள் தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சிராஜுதின், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், தவ்ஹீத் ஜமாஅத்,மாவட்ட செயலாளர் பாபு, மனித நேய மக்கள் கட்சி மாநில பிரதிநிதி ஓய்.சாதிக்பாஷா, மக்கள் கண்காணிப்பக அமைப்பாளர் செந்தில் ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் பேராசிரியர் சுந்தரவள்ளி பேசியதாவது:
காஷ்மீர் பகல்காம் தாக்குதலில் சுற்றுலா பயணிகளைக் காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்கள்.தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உறவி னர்களை பத்திரமாக தங்க வைத்து, உணவு கொடுத்து பாதுகாத்து, சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். இந்த ஒற்றுமைதான் இந்தியா. இஸ்லாமியர்கள் உயிரை துச்சமாக மதித்து தீவிரவாதிகளிடமிருந்து எங்களை காப்பாற்றினார்கள் என பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர்.
இந்த மக்கள் ஒற்றுமை தான் மோடிக்கு பிடிக்க வில்லை. பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட செல் லாமல் பீகார் பிரச்சாரத்திற்கு சென்றவர் தான் மோடி,
சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ராணுவம் வரவில்லை, காவல்துறையினர் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் மோடி அரசை குற்றம் சாட்டினர். ஆனால், மோடி எல்லா நிகழ்வுகளிலும் அரசியல் ஆதாயம் தேடுகிறார். இந்திய விடுதலைக்காக போராடிய ஒன்றரை இலட்சம் இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தனர். கோல்வால்கர், திரிசூலத்தால் கொல்லப்படுபவர்கள் மூன்று பேர்.
ஒன்று, இஸ்லாமியர்கள், இரண்டு, கிறிஸ்து வர்கள், மூன்று கம்யூனிஸ்ட்கள் என்று சொன்னார். தற்போது மோகன் பகவத் என்ன சொல்கிறார். இஸ்லாமியர், கிறிஸ்துவர் இந்துக்கள் என்று சொல்லி நடுநிலையை கடைப்பிடிக்கின்ற சமூக ஒற்றுமையை பேசுகிறவர்களைக் கொல்லவேண்டும் என்று சொல்கிறார்.
அனைத்து
சமூக மக்களோடு…
சமூக மக்களோடு…
நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் அமைதியாக இருக்கிறார்கள், இதில் பங்கேற் காத ஒரு கூட்டம் நாட்டை ‘நரவேட்டை’யாடிக் கொண்டிருக்கிறது.
மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்த போது இஸ்லாமியர்களும் மக்களை மீட்டனர்.கரோனா காலத்தில் பழகிய உறவினர்களே நேரில் பார்க்கத் தயக்கப்பட்டபோது, கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். கரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்தனர். இப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை புரிந்து அனைத்து சமூக மக்களோடு அன்பாக பழகி, ஒற்றுமையோடு வாழ்ந்து வருபவர்கள் இஸ்லாமியர்கள்.
இந்த சூழலில்தான் வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.இதன் நோக்கம் வக்ஃபு சொத்துக்களை கைப்பற்றவே மோடி அரசு மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது.வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறும்வரை தொடர் போராட்டம் நடத்து வோம் என பேசினார்.