பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்
குடிமை பாதுகாப்பு இயக்குநரகம் அறிவுறுத்தல்
சென்னை, மே 4- ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டை விட கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டும் அளவிற்கு இருக்கிறது.. இந்த சூழலில் மே 12 ஆம் தேதி வரையில் பொதுமக்கள் முடிந்த வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவரை அணுக வேண்டும்
குறிப்பாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த நாள்களில் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையில் கூடுதலாக இருக்கும். ஆகையால் யாரேனும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கைப்பேசி வெடிக்கலாம்
மேலும், வெயிலின் தாக்கம் குறைய எப்போதும் வீட்டில் இருக்கும் வீட்டுக் கதவைத் திறந்தே வைக்க வேண்டும். கைப்பேசியை சார்ஜ் போட்டவாறு பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். இதற்கு காரணம் அறையின் வெப்பநிலை காரணமாக ஏற்கெனவே உங்களது மொபைல் சூடாக இருக்கும். அப்படியிருக்கும் போது சார்ஜ் போடும் நிலையில் கூடுதல் வெப்பம் காரணமாக கைப்பேசி வெடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
பொதுமக்களுக்கான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
எளிதில் பற்றக் கூடிய இவற்றையெல்லாம் காரில் வைக்க கூடாது: 1. எரிவாயு பொருட்கள், 2. லைட்டர்கள், 3. கார்பனேற்றப்பட்ட பானங்கள், 4. வாசனை திரவியங்கள், 5. பேட்டரிகள், 6. காரில் பெட்ரோல் அல்லது டீசலை முழுவதுமாக நிரப்பக் கூடாது, 7. காலை நேரங்களில் கார் பயணங்களை தவிர்ப்பது நல்லது, 8. கார் டயரில் அதிக காற்று நிரப்பக் கூடாது, 9. கார் ஜன்னல்கள் கொஞ்சம் திறந்திருக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும்:
வெயிலின் தாக்கம் காரணமாக ஊர்வன வகையைச் சேர்ந்த தேள், பாம்பு ஆகியவை நீர் நிலைகளை தேடி வெளியில் செல்லும். இதை கவனத்தில் கொண்டு சாலையில் நடப்பது மிகவும் அவசியமானதாகும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எரிவாயு சிலிண் டரை வெயிலில் வைக்க கூடாது. மின் மீட்டர்களை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. வீட்டில் தேவைக்கேற்ப மட்டும் ஏசியை பயன்படுத்த வேண்டும். ஏசியை வீட்டில் 24-25 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும். உங்களது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.