சீர்காழி, சட்டநாதபுரம், மாவட்ட காப்பாளர் ச.மு.செகதீசனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது குடும்பத்தினர் வழங்கினர்.
தந்தை பெரியாரின் பாராட்டு, ‘விடுதலை’ நாளிதழின் பாராட்டுப் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். கொள்கை வழி மாறாது குடும்பத்தையும் நடத்தியவர் ச.மு.செகதீசன் ஆவார்.
– – – – –
பொறியாளர் வி.யாழினி, மருத்து வர் வி.குழலினி, பொறியாளர் வி.செந் தில்குமார் ஆகியோரது தந்தையார் கோவிலூர் பொறியாளர் டி.வாசு தேவன் 94ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (4.5.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
– – – – –
சேலம் மாவட்ட தொழிலாளரணித் தலைவர் கே.எம். கணேசனின் பிறந்தநாளை (மே-1) முன்னிட்டு, கே.எம். கணேசன் – க.சுந்தரவள்ளி இணையரின் மகன், ஜீவா ஆட்டோ மொபைல்ஸ் உரிமையாளர் க. ஜீவா, பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1000 மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார்.