திருவாரூர், மே 4- திருவாரூர் புலிவலம் மணியம் மருமகளும், நினைவில் வாழும் எஸ்.எஸ்.எம். கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வி ணையரும், திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் கி.அருண்காந்தி, அன்புகீதா சுகுமார் ஆகியோரது தாயாருமான கி.அமிர்தகவுரி அவர்கள் (வயது 77) 28.4.2025 திங்கட்கிழமை இரவு மறைந்தார். 29.04.2025 மாலை 4:00 மணிக்கு திருவாரூர் புலிவலம் தெற்கு வீதி அவர்களது இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
மறைந்த அம்மையாருக்கு திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வீர வணக்க செய்யப்பட்டது.
மறைந்த அம்மையார் கி.அமிர்த கவுரி அவர்களின் படத்திறப்பு நிகழ்வு மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி தொடக்க உரையாற்றினார்.
மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட காப்பாளர் வீர கோவிந்த ராஜ், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழக துணை தலைவர கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்.