நேற்று (2.5.2025) மாலை தியாகராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா – தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு விழா- ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில், கவிச்சுடர் கவிதைப் பித்தனுக்கு ‘‘புரட்சிக்கவிஞர் விருதினை’’ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கினார். உடன் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ேச.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், ஊடகவியலாளர் தி.செந்தில்வேல் ஆகியோர் உள்ளனர்.
கவிச்சுடர் கவிதைப் பித்தனுக்கு புரட்சிக்கவிஞர் விருதினை வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர்

Leave a Comment