ஜெயங்கொண்டம், மே 2- ஜெயங்கொண்டம் நகரதிராவிடர் கழக மேனாள் தலைவர் வை.செல்வராஜ் (வயது 73) 26.4.2025 சனிக்கிழமை காலை11.30 மணியளவில் மறைவுற்றார்.
செய்தியறிந்த கழகப் பொறுப்பாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன், மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன், கழக காப் பாளர் சி. காமராஜ், மாவட்ட துணை செய லாளர் க.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் ரத்தின. ராமச்சந்திரன் மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க.செந்தில் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன், ஜெயங் கொண்டம் நகரத் தலைவர் துரை. பிரபாகரன், ஒன்றிய தலைவர் ஆ.ஜெயராமன், தாபழூர் ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், இரா.ராஜேந்திரன், துணைத் தலைவர் சி. தமிழ் சேகரன் உத்திரக்குடி கலைவாணன், சீ.குமார்உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று மாலை வைத்து மரியாதை செய்தனர்.
இறுதிநிகழ்ச்சி
அவரது இறுதிநிகழ்ச்சி கரடிகுளம் சுடுகாட்டில் நடைபெற்றது. அவரது வாழ்விணையர் சுசீலா அம்மையார், மகன் கவாஸ்கர், மகள் சுகந்தி ஆகியோருக்கு கழகப் பொறுப்பாளர்கள் ஆறு தலை தெரிவித்தனர்.