சட்டப் பேரவையில் வி.சி.க. உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை
சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டப் பேரவையில் அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:
‘இந்த ஆண்டு 1925ஆம் ஆண்டில் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டாகும். எனவே, அந்த நூற் றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தலைநகர் சென்னையில், சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு நினைவுத் தூண் ஒன்றையும் அமைக்கவேண்டும் என்றும் பேரவைத் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.