அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, க.பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிப்பு. மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கருக்கு மின்சாரத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜ கண்ணப்பனிடமிருந்து பால்வளத் துறை எடுக்கப்பட்டு, வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது.
பதவி ஏற்பு விழா இன்று (28.4.2025) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கிறது
அமைச்சரவையில் மாற்றம்

Leave a Comment