கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.4.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து முகலா யர்கள், மற்றும் துக்ளக், லோடி உள்ளிட்ட டில்லியை தலைமையகமாக கொண்டு ஆண்ட முஸ்லிம் அரசர்கள் பற்றிய பாடங்கள் நீக்கம்; கும்பமேளா, மேக் இன் இந்தியா குறித்த பாடங்களை சேர்த்துள்ளது, என்.சி.இ.ஆர்.டி.
தி இந்து:
* பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு அரசாங்கத்திடம் கூட்டு முறையீடு செய்ய வேண்டுமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக அரசு அரசியலமைப்பு உரிமைகளை சிதைத்து வருகிறது; இடஒதுக்கீட்டுக் கொள்கை களை சீர்குலைக்கிறது என அகிலேஷ் குற்றச் சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதி, மதம் குறித்து இந்திய யதார்த்தங்களை அங்கீகரிப்பதில் சிபிஎம் தவறு இழைத்து விட்டது என சிபிஎம். அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஒப்புதல்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* புல்டோசரை பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாஜக சுத்தியல் மற்றும் உளியைப் பயன்படுத்தி அரசமைப்பை சிறிது சிறிதாக அழித்து வருகிறது என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.
* தமிழ்நாட்டை தனது வேட்டைக் களமாக மாற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முயற்சி; இது ஒரு திராவிட பூமி என்பதை நிரூபிப்பதன் மூலம் மாநில மக்கள் அமித் ஷாவின் திட்டத்தை தோற்கடிப்பார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாடல்.
* நிதி முறைகேடு வழக்கு: சேலம் காவல்துறையினர் பெரியார் பல்கலைக்கழக துணைத் தலைவர் ஆர். ஜெகநாதனிடம் ஆறு மணி நேரம் சரமாரிக் கேள்வி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *