தர்மத்துக்காக ஓர் கிளர்ச்சி புரட்சி நடைபெற்றது என்றால் 1918-இல் சர்.பிட்டி. தியாகராயசெட்டியார் அவர்கள் தான் இந்த நாட்டு மக்களின் சமுதாய நிலையைப் பற்றி சிந்தித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.
“இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம். இல்லை சமுதாயத்துறையில் கீழாகவே வைக்கப்பட்டு இருக்கின்றோம்” என்று வெளியிட்டு உள்ளார்.
அந்தக்காலத்தில் இந்த நாட்டில் படித்தவர்கள் தொகை
100-க்கு 8-பேர்கள்தான்! என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். “100க்கு 3பேராகவே உள்ள பார்ப்பனர்கள் கல்வி உத்தியோகம் முதலிய சகல துறைகளிலும் ஆதிக்கம் வகித்துக் கொண்டு பார்ப்பனரல்லாத பெரும் பான்மையான மக்களை அடித்தளத்தில் வைத்துள்ள நிலையினை மாற்றவேண்டும். இந்தக் காரணத்தை வைத்துத் தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தேன்” என்று கூறி ‘ஜஸ்டிஸ்’ கட்சியை ஆரம்பித்தார்.
பார்ப்பனர் அல்லாத பிரமுகர்களும் பொதுமக்களும் சிந்தித்து அந்த இயக்கத்துக்கு நல்ல ஆதரவு அளித்தனர். இந்த மாகாணத்தின் ஆட்சியையே தங்கள் கைக்கு வருகின்றபடி செய்து நன்கு ஆட்சி நடத்தி வந்தார்கள்.
– தந்தை பெரியார்
விடுதலை’ (10.04.1963)