சென்னை, ஏப். 27- தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற் றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நட வடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி யுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வழங்கி யுள்ள அறிவுறுத்தல்கள் விவரம்:
மாணவர்கள் விடு முறை நாள்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்றவற்றில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.
அதிக அளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள்
வெளிப்புற விளையாட் டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்தச் செய்யுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் பகல் நேரத்தில் வெளியே செல்வதையும், விளையாடுவதையும் தவிர்க்கவும்.
அதன்படி தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும் பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளைக் கவனித்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத் தொடர்புகளை ஊக்குவிக்கவும், மனநல னைப் பேணவும் முடி யும். தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றைப் பார்ப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
சமச்சீரான உணவு:
மாணவர்களின் வளர்ச் சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம். எனவே, பராம்பரிய உணவு வகைகளைத் தர வேண்டும். கோடை காலத்துக்கு ஏற்ற பழவகைகளை வழங்க வேண்டும். மாணவர்களை அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். அவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், சிறார் கதைகள் மற்றும் நீதி நூல்களைப் படிக்க அறிவுறுத்த வேண்டும்.
ஆர்வமுள்ள
மாணவர்களுக்கு…
இசை, நடனம், ஓவியம் போன்றவற்றில் ஆர்வமுள்ள மாணவர் களுக்கு விடுமுறை நாள்களில் அவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். பெரியவர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.