வணக்கம். ‘பச்சை ரத்தம்’ என்றொரு ஆவணப் படத்தை Periyar Vision OTT-இல் பார்க்க நேர்ந்தது. தேநீர் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக மாறிப் போய்விட்டது. அதனை ரசித்து, ருசித்துப் பருகும் நாம், அந்த தேநீர் நமக்குக் கிடைப்பதற்காக உழைக்கும் மக்களைப்பற்றி எப்போதும் சிந்திப்பதே இல்லை. அப்படியான சூழலில் வாழும் மக்களைப் பற்றி பேசுகிறது இந்த பச்சை ரத்தம் ஆவணப்படம். அதோடு மட்டுமல்லாமல், வரலாற்றுத் தகவல்களுடன் அம்மக்களின் அனுபவங்களையும் வலிகளையும் தொகுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். Periyar Vision OTT மேலும் இதுபோன்ற ஆவணப்படங்களை அதிகளவில் ஒளிபரப்ப என்னுடைய வாழ்த்துகள். – செல்வகுமார், திருநெல்வேலி Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com