டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மூன்றாவது மொழியாக தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தி கிடையாது என்ற மகாராட்டிரா அரசின் முடிவு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு வலு சேர்த்துள்ளது; இனியாகிலும் மக்களின் உணர்வை அறிந்து ஒன்றிய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்கிறது தலையங்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளுநர்கள் தேவையா? தமிழ்நாடு மசோதாக்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நீதிமன்றத்தின் மீதான பாஜக எம்.பி.க்களின் தாக்குதல், இந்த கேள்வியை எழுப்பத் தூண்டுகிறது என்கிறார் கட்டுரையாளர் நீரஜ் சவுத்ரி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ராஜ்நாத் சிங், அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டுகிறது.
* குஜராத் முந்த்ரா துறைமுகம் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபரின் பிணை மனுவுக்கு தேசிய விசாரணை ஏஜென்சி (NIA) எதிர்ப்பு. லக்ஷர்-இ.தொய்பாவின் பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்த நிதி பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு.
* உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்களை அங்கீகரிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.
டெக்கான் ஹெரால்ட்:
* உத்தரப்பிரதேசக் காவல்துறைப் பதவிகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இருப்பதாக அகிலேஷ் குற்றச்சாட்டு; டிஜிபி பதிலுக்கு மறுப்பு; முதலமைச்சர் யோகி பதில் அளிக்க வேண்டும் என அகிலேஷ் விமர்சனம்.
– குடந்தை கருணா