புதுக்கோட்டை, ஏப். 24- பொன்னமராவதியை அடுத்துள்ள அரசமலை கிராமத்தில் ஒடுக்கப் பட்டோர் உரிமை காப்பு நாள், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனைகளுக்குப் பாராட்டு விழாக்களை முன்னிட்டு தெருமுனைக் கூட்டமாக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் பி.தாமோதரன் தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டச் செயலாளர் இரா.வெள்ளைச்சாமி அனைவரையும் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.சரவணன் அறிமுகவுரையாற்றினார்.
ப.க.மாவட்டத் தலைவர் அ.தர்மசேகர், மாவட்டச் செயலாளர் இரா.மலர்மன்னன், மாவட்ட கழகத் தலைவர் மு.அறிவொளி, பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் மாவலி, ஒன்றிய துணைத் தலைவர் க.ஆறுமுகம், ப.க.முருகேசன், நாகராசன், திருமயம் ஒன்றியச் செயலாளர் விராச்சிலை க.மாரியப்பன், சர.செம்மொழி, திமுகவின் சார்பில் பகுத்தறிவு கலைஇலக்கியப் பேரவையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் தேனூர் சுப.சின்னையா, சின்னையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியப் பொறுப்பாளர்கள் வார்ப்பட்டு சுரேஷ், தமிழரசன், ம.மு.கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார். சின்னத்தம்பி நன்றி கூறினார்.