மேட்டூர், ஏப்.24 மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், 19.04.2025 அன்று மாலை 5 மணிக்கு, பாப்பம்பாடி சந்தைத் திடலில், தாரமங்கலம் ஒன்றியக் கழகம், பாப்பம்பாடி கிளைக் கழகம் தொடக்க விழாவும், தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழா மற்றும் ஒன்றிய அரசின் மும்மொழி கொள்கை எதிர்ப்பு, தமிழ்நாடு அரசிற்கு வழங்க வேண்டிய கல்வி வளர்ச்சி நிதியை உடனே வழங்க கோரி மாபெரும் பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல் நிகழ்வாக, கழகத்தின் இலட்சியக் கொடியை மேட்டூர் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன் தோழர்களின் வாழ்த்தொலிகளுடன் ஏற்றி வைத்தார்.
படத்திறப்புகள்
இரண்டாம் நிகழ்வாக படத்திறப்பு நடை பெற்றது. தந்தை பெரியாரின் படத்தை திமுக தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஆர். பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அண்ணல் அம்பேத்கரின் படத்தை மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர் கா. நா. பாலு திறந்து வைத்தார். அன்னை மணியம்மையாரின் படத்தை மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி திறந்து வைத்தார். அறிஞர் அண்ணாவின் படத்தை தாரமங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் திமுக பி.இராஜமாணிக்கம் திறந்து வைத்தார். முத்தமிழறிஞர் கலைஞரின் படத்தை தாரமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் திமுக ஆர். சரவணன் திறந்து வைத்தார்.
சுயமரியாதைச் சுடரொளிகள் உலக நாதன்- உ. மாரியம்மாள் படத்தினை பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் சிந்தா மணியூர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.
மூன்றாம் நிகழ்வாக சிறப்போடு பொதுக்கூட்டம் தொடங்கியது. மாவட்டத் தலைவர் கா.நா.பாலு தலைமை வகித்து, தலைமை உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ப. கலைவாணன் வரவேற்புரை ஆற்றினார். மேட்டூர் நகரத் தலைவர் இரா கலையரசன், தாரமங்கலம் ஒன்றியத் தலைவர் உல நக்கீரன், ப. க. மாவட்டத் தலைவர் கோவி அன்புமதி, மேட்டூர் நகர துணைச் செயலாளர் ப. அண்ணாதுரை, மாவட்ட மகளிரணிச் செயலாளர் கோ. அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பிரதிநிதி திமுக டி. ரமேசு, மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளர் திமுக எஸ். செல்வராஜ், மேனாள் பாப்பம்பாடி தலைவர் தி.மு.க. டி.வேடப்பன், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, ஆத்தூர் மாவட்ட செயலாளர் நீ.சேகர், நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி, நாமக்கல் நகரச் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கு.அம்பேத்கர், சீ.அரவிந்த், க.கம லேஸ்வரன், சீ.சக்தி, ப.வசந்த் உள்ளிட்ட இளைஞர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் முன்னிலையில், கழ கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தோழர்களுக்கு சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு புதிய கருப்பு சட்டைகளை பரிசாக வழங்கினார்.
கருத்துரை
தாரமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், கழகக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம் உள்ளிட்ட தோழர்கள் துவக்க உரையாற்றினர். தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கருத்துரை வழங்கினர்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
நன்கொடைவழங்கி,ஆதரவு!
முன்னதாக, சந்தை திடல் பகுதியில் கழகப் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியின் துண்டறிக்கை கொடுத்து வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் அழைப்பு விடுத்தனர். ஒரே மணி நேரத்தில் 2,683 ரூபாய் நன்கொடையாக வழங்கி, தம் ஆதரவை கழகத்திற்கு தெரிவித்தனர்.
சுயமரியாதைச் சுடரொளிகள் உலகநாதன்-உ. மாரியம்மாளின் பிள்ளைகள் உல.நக்கீரன், உல. கருணாநிதி, உல. அண்ணாதுரை, உல. ஹிட்லர், உல. கென்னடி, உல. வெற்றிமணி, உல. மணி யம்மை, உல. நாகம்மை ஆகியோர் தங்களின் வாழ்விணையர்களோடும், குடும்பத்துடனும் கலந்து கொண்டனர்.
பொதுக்குழு உறுப்பினர் கல் பாரப்பட்டி வேலாயுதம், கல்பாரப்பட்டி கிளைக் கழகத் தலைவர் கோவிந்தராசு, மேட்டூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் சிறீதர், எடப்பாடி நகரச் செயலாளர் சி. மெய்ஞான அருள், வெண்ணந்தூர் தோழர்கள் காளியப்பன், சிறீதர், செல்வக்குமார், எடப்பாடி நகர தலைவர் ச.ரவி, பி. நீலமேகம், நகரச் செயலாளர் காமராஜ், சேலம் மாநகர செயலாளர் இராவண பூபதி, கோ. சோமசுந்தரம், மேட்டூர் ஆர் எஸ் தோழர்கள் சு. குறிஞ்சி அழகன், சு. குறிஞ்சி வேந்தன், பெரியார் பற்றாளர் மா.சிவகுமார், அம்மாபேட்டை பகுதி செயலாளர் சு. இமயவரம்பன், அப்பாவு புவனேஸ்வரி, தமிழ் புலிகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் மாறன், மாநில மாணவரணிச் செயலாளர் சிலம்பரசன், பாலு உள்ளிட்ட தோழர்களும், பொதுமக்களும் ஏராளமாக திரண்டு கருத்துகளை செவிமடுத்தனர்.
நிறைவாக, பாப்பம்பாடி கிளைக் கழகத் தலைவர் உல. கென்னடி நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.