பழைய வண்ணை,ஏப்.24- பழைய வண்ணை கழகத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி (அண்ணல் அம்பேத்கர் -தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம்) என்ற தலைப்பில் சிமெண்ட்ரி ரோடு அருகில் உள்ள காளிங்கராயன் தெருவில் தெருமுனைக் கூட்டம் 22.4.2025 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணிக்கு நடந்தது.
தோழர் தமிழ்மாறன் (கழக இளைஞர் அணி) தொடக்க உரையாற்ற, பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்
இரா.ஆசைத்தம்பி வரவேற்புரை ஆற்ற, ஆறுமுகம் தலைமை உரையாற்ற, முனிராஜ் உரையாற்ற, விசிக உலக முதல்வன் தந்தை பெரியாரைப் பற்றி ஒரு பாடலைப் பாடினார்.
நிறைவாக கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் அவர்களின் சமூகத் தொண்டை விரிவாக எடுத்துரைத்தார்.
ஆர்.எஸ்.எஸ்., பாஜக பார்ப்பனிய ,சங்பரிவார் கும்பல்களின் தமிழர் விரோத, தமிழ் விரோத, தமிழ்நாடு விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை, திட்டங்களை, செயல்களை,போக்கினை கடுமையாக கண்டித்து, தமிழ்நாட்டு மக்கள் இந்த பாசிச சக்திகளை புறந்தள்ள வேண்டும்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தான் தமிழ்நாட்டை காப்பாற்றும்.அதற்காக நாம் களத்தில் அணி திரள வேண்டும், போராட வேண்டும் என்று எழுச்சி உரையாற்றினார்.
கூட்டத்தில் திராவிடர் கழக தோழர்கள், அம்பேத்கர் சிறுத்தைகள் தோழர்கள், மாடர்ன் லைன் அண்ணல் அம்பேத்கர் மன்ற தோழர்கள் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
கூட்டத்தை தோழர் வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.