ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது. RRB ALP ஆட்சேர்ப்பு 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி தற்போது காலியாகவுள்ள 9970 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரயில்வே பணியாளர் தேர்வு
ரயில்வே துறையில் லோகோ பைலட் எனப்படும் ரயில் ஓட்டுநர் பணி, எண்ணற்ற இளைஞர்களின் கனவுப் பணியாக விளங்குகிறது. இந்த முக்கிய பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. உதவி லோகோ பைலட் பணிக்கான 9,970 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, தேர்வு முறை எப்படி இருக்கும், ஊதியம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, விண்ணப்பிக்கும் முறை என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே விரிவாகக் காணலாம்.
துறைகள்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
காலியிடங்கள்: 9,970
பணிகள்: உதவி லோகோ பைலட் (ALP)
விண்ணப்பிக்கும் முறை: இணையம் மூலம்
கடைசி தேதி: 11.05.2025
பணியிடம்: தமிழ்நாடு மற்றும்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.rrbapply.gov.in/