கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.4.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

< தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என சொல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி; சட்டப்பேரவையில் காரசார வாக்கு வாதம்.

< உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி மீதான விமர்சனத்தை தொடர்ந்து மேனாள் தலைமை தேர்தல் ஆணையரை முஸ்லீம் ஆணையர் என்று குறிப்பிட்ட பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே; ‘தனிநபர்கள் மதத்தால் அல்ல, பங்களிப்புகளால் தீர்மானிக்கப்பட வேண்டும்’ – மேனாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி பதிலடி.

< நாடாளுமன்றம் மற்றும் நிர்வாக அதிகாரங்களில் நாங்கள் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கவாய் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

< இந்திய தேர்தல் முறையில் நிறைய பிரச்சி னைகள் உள்ளன உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக் கையை விட அதிகமான வாக்குகள் பதிவாகி யுள்ளன. தேர்தலை நடத்துவதில் ஏதோ மிகப்பெரிய தவறு உள்ளது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டோம். இதுகுறித்து பகிரங்கமாக பொதுவெளியில் கூறியுள்ளோம் என அமெரிக்காவில் பல்கலைக்கழக நிகழ்ச்சி யில் ராகுல் விமர்சனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< ’என் கவனம் முதலில் பீகார் மீது தான்’ என சிராஜ் பஸ்வான் பேச்சு, தனது கட்சிக்கு சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களுக்கான உரிமைக் குரல் என என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளான பாஜக, அய்க்கிய ஜனதா தளம் தலைவர்கள் கவலை.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் சமூக நீதி: தீர்மானங்கள் மீது பேசிய 54 பேரில், எஸ்.சி., எஸ்.டி. ஓபிசி, சிறுபான்மையினர் 39 பேருக்கு வாய்ப்பு; உயர் ஜாதியினர் 15 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. இது பல பத்தாண்டுகளாக கட்சியின் உள் பங்கேற்பு வரலாற்றில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது, பின்தங்கிய வகுப்பினருக்கும் சிறுபான்மையினருக்கும் அதிக இடம் வழங்கப்பட்டுள்ளது.

< உயர்நீதிமன்ற 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை; இருவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம். உயர் நீதிமன்றங்களில் “உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை புகுத்துவதற்கும், நீதி நிர்வாகத்தின் தரத்தை வலுப்படுத்துவதற்கும்” இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூறியுள்ளது.

தி இந்து:

< மகாராட்டிராவில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஹிந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் மகாராட்டிரா அரசின் முடிவு தேசிய கல்விக் கொள்கையை  (NEP-2020) மீறுவதாக மகாராட்டிரா அரசு நியமித்த மொழி ஆலோசனைக் குழுவின் தலைவர் லட்சுமிகாந்த் தேஷ்முக் பத்திரிக்கைக்கு பேட்டி. தங்கள் குழுவிடம் ஆலோசனை கேட்கவில்லை என்றும் புகார்.

< பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள், தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்த திட்டம்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *