திராவிடர் கழகத்தின் புதிய கொடி உருவாக்கப்பட்ட நாள் இன்று (22.4.1946)
கருப்பு நிறப் பின்னணியில் சிவப்பு வட்டம் கொண்ட திராவிடர் கழகத்துக்கான புதிய கொடி இந்நாளில்தான் (1946) உருவாக்கப்பட்டது. அது இயக்கத்தின் கொள்கை களையும் இலட்சியங்களையும் குறிப்பதாக அமைந்தது.
திராவிடர் கழகத்திற்கென தனித்துவமான இக்கொடி கருப்பு நிற பின்னணியில் நடுவே சிவப்பு வட்டத்தைக் கொண்டது.
இந்தக் கொடியின் கறுப்பு நிறம் திராவிட மக்களின் இழி நிலையையும், ஒடுக்குமுறையையும் குறிப்பதாக அமைந்தது. நடுவில் உள்ள சிவப்பு வட்டம், இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான புரட்சிகர உணர்வையும், எழுச்சியையும் வெளிப்படுத்துகிறது.
இந்தக் கொடி, தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதை, ஜாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, பெண் உரிமைகள் மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி திராவிடர் கழகத்தின் அடையாளமாக விளங்குகிறது.
பகுத்தறிவுக் கட்டுரையாளர்
சாமி கைவல்யம் நினைவு நாள் இன்று (22.4.1953)
தந்தை பெரியாரும் , சாமி கைவல்யமும் 1903 ஆம் ஆண்டில் திருச்செங்கோடு அருகில் உள்ள இளம்பிள்ளை என்ற ஊரில் சந்தித்தனர்.
சாமி கைவல்யம் சுயமரி யாதை இயக்கத்தின் சிந்தனை வளர்ச்சிக்குப் பங்களித்தவர். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கு வலுசேர்த்த முக்கிய அறிஞர்களில் அவரும் ஒருவர் ஆவார்.
கைவல்யசாமியின் கட்டுரைகள் தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ மற்றும் ‘திராவிட நாடு’ போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. இவை பெரும்பாலும் இந்து சமயப் புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் சடங்குகளில் இருந்த மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்திருந்தன.
சாமி கைவல்யத்தின் எழுத்துக்களும், பேச்சுகளும் பகுத்தறிவுப் பாடங்களாக அமைந்திருந்தன.
‘குடிஅரசு’ இதழில் இவர் எழுதிய இந்து மத வேத, சாஸ்திர, இதிகாச புராண எதிர்ப்புக் கட்டுரைகள் அசைக்க முடியாத உருக்கு மலை போன்றவை. அதில் ஒரு வரியைக் கூட மறுத்து எழுதிட எந்தக் கொம்பனும் அன்றும் பிறக்கவில்லை; இன்றும் இல்லை.
இன்று உலக புவி நாள் – முக்கியத்துவம் என்ன?
பூமியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970 முதல் ‘உலக புவி நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நமக்கு வாழ்க்கை அளித்து வரும் பூமியை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது. இந்த ‘Our Planet, Our Power’, அதாவது, 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை 3 மடங்காக உயர்த்துவதை குறிக்கிறது.