தமிழ்நாடு முழுவதும் புதிதாக 643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

4 Min Read

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு முழுவதும் புதி தாக643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட பேரவையில் அறிவித்தார்.

புதிய அறிவிப்புகள்

சட்டபேரவையில் நேற்று (21.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவா தத்துக்கு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளி யிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் புதிதாக 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

வாடகை  கட்டடங்களில் செயல் பட்டு வரும் 300 துணை சுகாதார நிலை யங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரூ.137.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடடங்கள் கட்டப்படும்.

862 மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் ரூ.12.78 கோடி செலவில் வழங்கப்படும். தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை இறப் புகளை குறைப்பதற்கு 84 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு உயிர்காக்கும் அதி நவீன உபகரணங்கள் ரூ.7.49 கோடியில் வழங்கப்படும்.

ரூ.2 கோடி உதவித்தொகை

கரூர், விருதுநகர், தர்மபுரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குறைப் பிரசவம் மற்றும் குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பராமரிக்கவும், ஆபத்தான அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் இருந்து வரும் பச்சிளம் குழந்தைகள் நிலைப்படுத்துதல் பிரிவுகளை தலா ரூ.62.42 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.2½ கோடி செலவில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளாக மேம்படுத்தப்படும்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் முழுநேர ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.2 கோடி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.

கிராமங்களில் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை வசதி

முதல்முறையாக கிராமங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து அந்த பகுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும். ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளான 150 மில்லி லிட்டர் பால், 2 வேகவைத்த முட்டையின் வெள் ளைக்கரு, 50 கிராம் சுண்டல், குறைந்த சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ள பிஸ்கட்டுகள் வழங்கப்படும்.

எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி

தமிழ்நாட்டில் உள்ள 7,618 எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு உட்பட் டோரின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளிலும் மற்றும் 18 தனியார் மருத்து வக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தற்போது கட்டணமில்லா வகையில் எச்.அய்.வி., எய்ட்ஸ் தடுப்பு பரிசோ தனை மற்றும் சிகிச்சை வசதிகள் வழங்கப்படு கின்றன.  இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள ஏனைய அனைத்து தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை களிலும் கட்டணமின்றி இந்த பரிசோ தனை மற்றும் சிகிச்சை வழங்க உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிர மணியன் கூறினார்.

தமிழ்நாட்டில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில்
500 புதிய முதுநிலை மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்

சென்னை, ஏப்.22- தமிழ்நாட்டில் உள்ள 13 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் 500 புதிய முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

500 மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள்

சட்டப் பேரவையில் நேற்று (21.4.2025) அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிய மருத்துவ படிப்பு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட உள்ள வசதிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருவள்ளூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கரூர் ஆகிய 13 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 500 முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும்.

சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை,மதுரை,கோவை, சேலம், கடலூர் உள் பட 25 அரசு மருத்துவக்கல் லூரிகளில் உள்ள மருத்துவ மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாரடைப்புக்காக உயிர்காக்கும் உயர்சிகிச்சை அளிக்க இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள் ரூ.15 கோடி கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, சிவகங்கை, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பட்டுக்கோட்டை, மேட்டூர், மணப்பாறை, பொள்ளாச்சி ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் புதிய அதிநவீன சி.டி.ஸ்கேன் கருவிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.  தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 100 அரசு மருத்துவமனைகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நல வாழ்வுமையங்கள் ரூ.7கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *