சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்பை உச்சிமோந்து வரவேற்கிறோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று, பாராட்டு அறிக்கை!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளையொட்டி (ஏப்ரல் 29) தமிழ் வார விழாவாகக் (ஏப்.29 தேதி முதல் மே 5 ஆம் தேதிவரை) கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள நமது சமூகநீதி காத்த சரித்திர நாயகர் மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நாம் உச்சிமோந்து, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறோம்.
திராவிடர் இயக்க ஆட்சி வரலாற்றில் இது ஓர் இணையற்ற புதிய பொன்னேடு. உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்களின் பெருவிருப்பத்தைச் சிறப்பாக நிறைவேற்ற விதி 110–இன்கீழ் அறிவித்த நமது இணையற்ற முதலமைச்சரைப் பாராட்டி, வரவேற்று, நன்றி செலுத்தி வாழ்த்துவார்கள் என்பது திண்ணம்.
இந்நாள் (22.4.2025) ஓர் இனிய, வரலாற்றுச் சாதனை நாள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
22.4.2025
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சர் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, முதலமைச்சரின் இன்றைய அரிய அறிவிப்புக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.