நாசாவின் மூத்த வீரர் டான் பெட்டிட் தனது 70-ஆவது பிறந்த நாளை கொண்டாட விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் கடந்தாண்டு அக்டோபரில் அவர் விண்வெளிக்குச் சென்றார். சக ரஷ்ய வீரர்களுடன் விண்கலத்தில் இருந்து பூமி திரும்பிய அவர், கஜகஸ்தான் அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினார். விமானம் மூலம் அவரை அமெரிக்கா அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.