அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால், நிரந்தர பார்வை இழப்பு அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். பார்வை குறைபாடு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக 0-16 வயது உடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2050-க்குள் உலகம் முழுவதும் 50 சதவீதம் பேருக்கு MYOPIA குறைபாடு ஏற்படும் எனவும், இது நிரந்தர பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.