பெரியகுளம், ஏப். 21- பெரியகுளம் ஒன்றியம் கள்ளிப்பட்டி, போடி ஒன்றியம் டொம்புச்சேரி ஆகிய ஊர்களில் 20.4.2025 அன்று காலை 11 மணிக்கு கொள்கைக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம் உற்சாகம் பொங்க நடைபெற்றது.
கழக காப்பாளர் போடி.ச.இரகுநாகநாதன்வழிகாட்டுதலின்படிநடைபெற்ற நிகழ்வில், மாவட்ட கழக தலைவர் ம.சுருளிராஜ், மாவட்டச் செயலாளர் தேனி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன், கழக பேச்சாளர் ஆண்டிப் பட்டி கண்ணன் ஆகியோர் பங்கேற்று கழகத்தின் தேவையை எடுத்துரைத்தார்கள்.
கலந்து கொண்ட தோழர்கள் யாவரும் அறிவாசான் தந்தை பெரியாரின் கொள்கை சிறப்பினையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய தொண்டினையும்பகிர்ந்து கொண்டார்கள்.
புதிய கிளைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
ஒன்றிய திராவிடர் கழக மகளிரணி, மாண வர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.
தெருமுனைக்கூட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.
சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட துணைச்செயலாளர் லோ.முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் சென்றாயன் ஆகியோருக்கு நன்றி கூறி, சிலம்புப் போட்டியில் விருதுகள் பெற்றுவரும் பெரியார் பிஞ்சை பாராட்டி மகிழ்ந்தனர்.