சென்னை, ஏப். 21- சென்னையைச் சேர்ந்த டேக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே முதன்முறையாக, மகளிருக்கென சிறப்பு வசதிகள் கொண்ட ‘பிராஸ்பெரா பை டேக்’ என்னும் குடியிருப்பு வளாகத்தை போரூரில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதில் பொழுதுபோக்கு, பேசிப் பழகுவதற்காகன ‘ஷீ-கார்னர்’ என்னும் உள்ளரங்கம், கேமரா கண்காணிப்பு வசதி கொண்ட குழந்தைகள் காப்பகம், பெண்கள் உடற்பயிற்சி கூடம் போன்ற தனித்துவமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.சதீஷ் குமார் கூறுகையில், பொழுதுபோக்கு, தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான தனித்துவம் ஆக்கப்பட்ட வடிவமைப்பை அனுமதிக்கும் கேமரா கண்காணிப்புடன் கூடிய குழந்தைகள் காப்பகம், ஒவ்வொரு வீட்டிலும் ரோபாட் தூய்மைக் கருவி என, குடும்பங்கள் பாதுகாப்பான, வசதியான, அதிகாரம் பெற்ற வாழ்க்கையை நடத்துவதற்கு பெண்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கமளித்துவரும் பெண்களுக்கு இந்த மைல்கல் திட்டத்தை அர்ப்பணிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.