கிருட்டினகிரி, ஏப். 20- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப் பினரும், மேனாள் நகரத் தலைவருமான பெரியார் பெருந் தொண்டர் மாவட்ட கழக காப் பாளர் வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி (வயது 85) அவர்கள் 11/04/2025 அன்று மறைந்தார்.
அம்மையாருக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் தலைமைக் கழகம் சார்பில் கழகக் கொடி போர்த்தி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இரங்கல் கூட்டம்
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி இரங்கல் கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார்.
கிருட்டினகிரி பெ.மதிமணியன், ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவர் இரா.சுப்புலட்சுமி, கிருட்டினகிரி காதி கிராப்ட் கிருட்டினமூர்த்தி ஆகியோர் இரங்கல் உரைக்குபின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமன் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை வாசித்து விட்டு அம்மாவின் இயக்கப் பணி களை நினைவுகூர்ந்து இரங்கல் உரையாற்றினார்.
இறுதி நிகழ்வில் மாவட்ட தி.மு.க இலக்கியணித் தலை வரும் விடுதலை வாசகர் வட்டத் தலைவருமான வெ.நாராயண மூர்த்தி, திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் சுப்புலட்சுமி, திருப்பத்தூர் நகரத் தலைவர் காளிதாஸ, நகரச் செயலாளர் சித்தார்த்தன், ஓசூர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், ஓசூர் மாநகரத் தலைவர் து. இரமேசு, தருமபுரி மாவட்ட விவசாய அணி தலைவர் மு. சிசுபாலன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, கிருட்டினகிரி மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் இல. ஆறுமுகம், கி.முருகேசன், மேனாள் மாவட்டத் தலைவர் பெ.மதிமணியன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க. தலைவர் ச.கிருட்டினன், வசந்தி கணேசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, ஒன்றியத் தலைவர்கள் காவேரிப்பட்டணம் பெ.செல்வம், கிருட்டினகிரி த.மாது, மத்தூர் சா.தனஞ்செயன், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசன், செயலாளர் அ.கோ.இராசா,மேனாள் நகரச் செயலாளர் ஜி.கருணாநிதி, மகளிரணி பையூர் தமிழ்செல்வி, மத்தூர் உண்ணாமலை, புலியாண்டூர் சி.இராசா, குடி யாத்தம் ஏங்கல்ஸ் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும், கழகத்தோழர்களும், பொது மக்களும், வழக்குரைஞர்களும், உறவினர்களும் கலந்துக்கொண்டு மாலை அணிவித்து இறுதி மரி யாதை செலுத்தினர்.
எவ்வித மத நிகழ்வுகளும் இன்றி
12/04/2025 – காலை 11.00 மணியளவில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அம்மையாரது உடல் கிருட்டினகிரி பூங்காவனம் தெரு அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவண்ணாமலை சாலை மேம்பாலம் அருகேயுள்ள மின்மயானத்தில் 12/04/2025 நண்பகல் 12.00 மணியளவில் அன்று எவ்வித மத நிகழ்வுகளும் இன்றி எரியூட் டப்பட்டது.
மறைந்த பிரபாவதி அம்மையாரை இது நாள்வரை பாதுகாத்துவந்த அவரது அக்கா மகள் ஜான்சியிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அலைபேசி வாயிலாக தொடர்புக்கொண்டு ஆறுதலை தெரிவித்தனர்.