விருத்தாசலம், ஏப்.19 விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் பிறந்தநாள் விழா விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில் 13.04.2025 அன்று நடைபெற்றது.
புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகி யோரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் விருத்தாசலம் மாவட்ட செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்றார். மாவட்ட காப்பாளர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பி.பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் தங்க.ராசமாணிக்கம், நகரத் தலைவர் ந.பசுபதி, மாவட்ட இளை ஞரணி தலைவர் செ. சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வின் தொடக்கமாக அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி விக்கப்பட்டு, சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது.
சிறப்பு தீர்மானம்
ஆரிய பண்பாட்டு படையெடுப்பின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் சமஸ்கிருத மய மாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் முதுகுன்றம் எனும் ஊர் விருத்தாசலம் என சமஸ்கிருத மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், அயராது பாடு படும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் விருத்தாசலம் பெயரை திரு முதுகுன்றம் என அறிவித்திட நட வடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரை வேண்டி கேட்டுக்கொள்கிறது – எனும் தீர்மா னத்தை மாவட்ட தலைவர் த.சீ.இளந்தி ரையன் முன்மொழிந்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கையொலி எழுப்பி தீர்மானத்தை வரவேற்றனர்.
இதனையடுத்து கழக சொற்பொழி வாளர் புலவர் வை.இளவரசன், திராவிட மாணவர் கழக சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் நாகை மு.இளமாறன் ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். அப்போது, தந்தை பெரியார், புரட்சி யாளர் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகி யோரின் சிறப்புகள் குறித்தும், மக்கள் சமூகத்துக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்தும், பெரியார் – அம்பேத்கரின் இன்றைய தேவை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
கலந்துகொண்டோர்
கூட்டத்தில், பெண்ணாடம் நக ரத் தலைவர் செ.க.ராஜேந்திரன், விருத்தாசலம் நகர செயலாளர் மு.முகமது பஷீர், திட்டக்குடி நகர தலைவர் வெ. அறிவு, விருத்தாசலம் ஒன்றிய தலைவர் கி.பாலமுருகன், விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் கா.குமரேசன், நா.பாவேந்தர் விரும்பி, கம்மாபுரம் ஒன்றிய தலைவர் த.தமிழ்ச்செல்வன், வேப்பூர் வட்டாரச் செயலாளர் ம.இளங்கோவன், விருத்தாசலம் நகர அமைப்பாளர் சு.காரல்மார்க்ஸ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெங்கட.ராசா, இளைஞரணி துணைச் செயலாளர் கோழியூர் ஆனந்த், ராஜசேகர், கா.அறிவழகன் , அபிராம், வடலூர் முருகன், குணசேகரன், தீன.மோகன், வீரச்செல்வன், இளமதி, இளங்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான
சே. பெரியார்மணி நன்றி கூறினார்.