‘கல்வியில் பார்ப்பன சதிகள்’ என்கிற தலைப்பிலான காணொலியை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். கல்வியில் குறிப்பாக மருத்துவத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கான உரிமைகள் எப்படிப் பறிக்கப்பட்டன என்பதை வரலாற்றுப்பூர்வமாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியிருந்தார். ‘சதுர்வேதிமங்கலம்’ என்பதன் அர்த்தம் என்ன? சேரர், சோழர், பாண்டியர் என எல்லா அரசர்களும் மக்களை எப்படி நடத்தினார்கள்? குலக்கல்வித் திட்டம் என்றால் என்ன? நீட் தேர்வில் உள்ள அரசியல் என்ன? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆசிரியர் அவர்கள் எளிமையாக விளக்கிச் சொல்லியிருந்தார். இதுபோன்று ஏராளமாக காணொலிகளைத் தொகுத்து வழங்கும் ‘Periyar Vision OTT’-இன் பணிகள் தொடரட்டும்.
– தமிழ் செல்வன், தஞ்சாவூர்.
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு : periyarvision.com