சென்னை, ஜூலை 4 – மீண்டும் செய்திகளில் இடம் பிடித்த தமிழ் நாட்டு ஆளுநர் ஆர். என். ரவி, இந்திய அரசமைப்பு சட்ட விதி களுக்கு மாறாக ஒருத லைப்பட்ச மான முடிவுகளை மேற்கொண்டு, தொடர்ந்து அத்து மீறல்களில் ஈடு பட்டு வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு (1.7.2023) தனது தலையங்கத்தில் விமர்சனம் செய் திருக்கிறது.
அது பற்றிய விவரம் வருமாறு :
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார். நீதிமன்றக் காவ லில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் வி. செந்தில்பாலாஜியை ஒருதலைப் பட்சமாக தகுதியிழப்பு செய்து ஒரு கடிதமெழுதிய நிலையில், அந்தக் கடிதத்திற்கு மற்றொரு மறுப்பு கடிதத்தை அன்று பின்னிரவே எழுதி, தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.
பணிநீக்கம் குறித்த அவரது அறிவிப்பை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி அமைச் சரவையில் நீடிப்பது குறித்த விடயத் தில் அரசமைப்பு நிலைப்பாடு தெளிவாக இருப்பதால் எவ்வித மான சந்தேகத்திற்கும் அதில் இட மில்லை. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக அமைச் சரை தகுதி நீக்கம் செய்வ தாக கடிதம் எழுதியது தவறு.
அமைச்சரவையை அமைப்பதில் முதலமைச்சரின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்படவேண்டும் என்றே அரசியல் சாசனம் தெளி வாக குறிப்பிடுகிறது.
1967ஆம் ஆண்டு காலகட்டம் வரையில், ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவு முறை வரலாறு என்பது பெரும் பாலும் சீரற்ற விதத்திலேயே அமைந் திருந்தது. அதைத் தொடர்ந்து மாநிலங்களில் ஒன்றிய அரசின் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வரும் நிகழ்வுகள் அதிகரித்தபோது, சம்பந் தப்பட்ட மாநில ஆளுநர் களின் முடிவுகள் பெரும்பாலும் நீதிமன்ற சர்ச்சைகளுக்கே வழிவகுக்கும் விதத்தில் அமைந்திருந்தன. அதன் விளைவாக ஆளுநரின் அதிகார வரம்புகள் குறித்த தெளிவான பார்வையை அளிக்கும் பல்வேறு தீர்ப்புகளின் தொகுப்பை உச்சநீதி மன்றம் கொண்டுள்ளது.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட ஒரு முக்கிய மான தீர்ப்பில் (ஷம்ஷேர் சிங் எதிர் பஞ் சாப் மாநிலம்) ஆளுநர், மாநில அரசுக்கு இணையான ஒரு நிர்வா கத்தை நடத்துவதை அரசமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியது. அதாவது, ஆளுநரின் விருப்புரிமை அதிகாரங்கள் என் பது வரையறுக்கப்பட்டவை ஆகும்.
ஆளுநர்கள் சில நேரங்களில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் 1935ஆம் ஆண்டு சட்டத்தை மனதில் நினைத் துக்கொண்டு செயல்படுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், அந்த சட்டம் அவர்களுக்கு விருப்புரிமை அதிகாரத்தை வழங்கியிருந்தது.
அத்துடன், அமைச்சரவையின் கூட்டத்திற்கு தலைமை தாங்கவும் அனுமதித்திருந்தது. அந்த சகாப்தம் எப்போதோ முடிந்துவிட்டது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றம் நிறை வேற்றிய மசோதாக்களுக்கு ஒப்பு தல் அளிக்காமல், அவற்றைக் கிடப் பில் போட்டு வைப்பது அல்லது ஒரு தலைப்பட்சமாக அமைச்சர வையில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி செய்வது ஆகியவை சம்பந் தப்பட்ட மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை சீர் குலைத்துவிடும். இது போன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் நீதித்துறை சர்ச் சைகளாக முடிவடைவதால், அரசு எந்திரத்தை அது மேலும் முடக்கு வதாக மாறுகிறது. இந்த விடயத்தில் ஆர். என். ரவியின் நடத்தையும், சட்ட மசோதாக்களை கிடப்பில் போடும் போக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. அப்படிப்பட்ட போக்குகள் ஒன் றிய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடை யில் முக்கிய பிணைப்பாக உள்ள அரசமைப்பு விதிகளை நிறு வுவதில் உள்ள ஒருமைப்பாட்டைக் குறைமதிப் புக்கு உட்படுத்துகிறது. இது குறித்து ஒன்றிய அரசு ஆளுந ரிடம் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
இவ்வாறு ‘டைம்ஸ் ஆப் இந் தியா’ நாளேட்டின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.