தமிழர் தலைவர் இரங்கல்
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் கோ.தளபதி அவர்களின் தாயார் மாரியம்மாள் (வயது 92) அவர்கள் முதுமை காரணமாக நேற்று (16.4.2025) மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அம்மா மாரியம்மாள் அவர்களும், அவருடைய இணையர் கோபால்சாமி அவர்களும் உள்ளாட்சி மன்றங்களில் உறுப்பினர்களாக மக்கள் பணியாற்றியவர்கள். அய்யா கோபால்சாமி அவர்கள் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், மதுரை மாவட்ட திமுக அவைத் தலைவராகவும் செயல்பட்டவர் என்பதுடன், கோவில்களில் அறங்காவலராக இருந்தாலும், விபூதி அணியாமல் அறங்காவலர் பொறுப்பை நிர்வாக ரீதியில் அணுகிய பகுத்தறிவாளர். டில்லியில் மேனாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் நடத்திய பெரியார் பிறந்தநாள்விழாவிலும் பங்கேற்ற கொள்கை உணர்வாளர். திராவிட இயக்கக் கொள்கை வழி வந்த குடும்பம்.
மறைந்த அம்மையார் மாரியம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், குடும்பத்தினர், திராவிட இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
17.4.2025