இந்நாள் – அந்நாள்

1 Min Read

உலக ஹீமோபிலியா நாள்
இன்று (ஏப்ரல் 17)

நில்லாமல் வடியும் குருதி

காயத்தால் ஏற்படும் குருதிக் கசிவானது  குருதியின் உறையும் தன்மையால், மனிதர்களுக்குச் சிறிது நேரத்தில் நின்றுவிடும். குருதி  உறைவதற்கு என நமது உடலில் 13 வகையான குருதி  உறைபொருட்கள் உள்ளன. ஆனால், குருதி உறை பொருளின் குறை பாட்டால் குருதிக் கசிவு சிலருக்கு எளிதில் நிற்காது. இதுவே ஹீமோபிலியா.

5,000 ஆண் குழந்தைகளில் ஒருவருக்கு இந்தக் கோளாறு உள்ளது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. உலகம் முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவுக்கு அடுத்ததாக, இந்தியாவில்தான் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்.

ஹீமோபிலியா என்றால் என்ன?

இது ஒரு மரபுவழி குருதிப் போக்குக் கோளாறு.  ஆனாலும், பரம்பரையாக மட்டுமல்லாமல்; புற்றுநோய், உடல் எதிர்ப்பாற்றல் நோய்கள், கர்ப்பகாலத்தில் ஏற்படும் உறைபொருள் குறைபாடு போன்றவற்றாலும் ஹீமோபிலியா ஏற்படச் சாத்தியம் உள்ளது. உலக ஹீமோபிலியா நாளில் மருத்துவரை நாடுவதே, சிகிச்சையின் முதல் படி என்பது தான் இந்த ஆண்டுக்கான கருப் பொருள். இந்திய ஹீமோ பிலியா கூட்டமைப்பு, இந்தக் குறைபாட்டை கண்டறி யவும் சிகிச்சை செய்யவும் தடுப்பூசி வழங்கவும் உதவிவருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண