மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் நன்றி
கந்தர்வக்கோட்டை, ஏப். 17- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெ.தங்கம் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அதிகாரம் மிக்க அவைகளில்…
சமீபத்தில், கொளத்தூரில் கட்டப்பட்ட தந்தை பெரியார் மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகள் சட்டம் வரும் சட்டப் பேரவைத் கூட்டத் தொடரில் திருத்தப்படும். இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெறுவது உறுதி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம் பெறுவார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் திருநர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம்தான், மாற்றுத் திறனாளி களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம். இதுதான் உண்மையான சமூகநீதி அரசு – பெரியார் அரசு” என்று தெரிவித்திருந்தார்.
நகர்ப்புறங்களில் நியமன பதவி
அதன்படியே 16.4.2025 அன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி மற்றும் நகர்ப்புறங்களில் நியமன பதவி வழங்குவதற்கான சட்ட முன் வடிவை அறிமுக படுத்தியும், மாற்றுத் திறனாளிகள் அதிகாரம் மிக்க அவைகளில் இடம்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித் துள்ளார்.
இதேபோல், ஊரக உள்ளாட்சிகளை பொறுத்தவரை கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய குழு, மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் ஒரு மாற்றுத் திறனாளியை நியமன உறுப்பினராக நியமிக்கும் வகையிலும் ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் இரண்டு மாற்றுத் திறனாளிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் பலர் பயன் அடைந்து வருகிறோம்.
மாற்றுத் திறனாளிகளின் குரல்
அந்த வரிசையில் எங்களுக்கு மேலும் ஒரு மணிமகுடம் வழங்குவது போல, மாற்றுத் திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பதற்கும் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாக திகழ்வதற்கும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி எங்களையும் உள்ளாட்சி அமைப்பு களின் நியமன பிரதிநிதியாக நியமனம் செய்ய சட்ட முன் வடிவை அமல்படுத்தி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் கனவை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்தொகை துறை அமைச்சர் கீதா ஜீவன், பிற்படுத்தப் பட்ட நலத்துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன், புதுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்து ராஜா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை அனைத்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து உயர் அலுவலர்களுக்கும் மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.