கொடுங்கையூர், ஏப். 17- சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மக்கள் நலத் திட்டங் களைப் பரப்புரை செய்தும், கொளத்தூர் – அரசு மருத்துவமனைக்குத் தந்தை பெரியார் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி – பாராட்டுத் தெரிவித்தும் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 31.3.2025 அன்று மாலை 6.30 மணிக்கு கொடுங்கையூர் – முத்தமிழ் நகர் 2ஆவது மெயின் ரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட இளை ஞரணித் தலைவர் வ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ந.கார்த்திக் வரவேற்புரையாற்றினார். மாநில கழக இளைஞரணித் துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தொடக்கவுரை ஆற்றினார்.
முன்னிலை
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற் குழு உறுப்பினர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மாவட்ட கழக காப்பாளர் கி.இராம லிங்கம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உரையாற்றியோர்
பெரம்பூர் வடக்குப் பகுதி திமுக செயலாளர் ஆ.முருகன், பெரம்பூர் பகுதி விசிக செயலாளர் கல்தூண் அ.ரவி, வடசென்னை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் எ.த.இளங்கோவன், க.கனிமொழி, கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் வழக்குரைஞர் மதிவாணன் ஆகியோர் உரையாற்றினர்.
பிரின்சு என்னாரெசு பெரியார்
– பா.மணியம்மை சிறப்புரை
அடுத்து திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, நீட் தேர்வு, பார்ப் பனரல்லாதார் மருத்துவக் கல்வி பயில்வதற்கு இருந்த தடைகள், ஹிந்தி – சமஸ்கிருதத்தைத் திணிக்கின்ற ஒன்றிய அரசு, கல்வியிலும், சட்டத் துறையிலும் வாயில் நுழைய முடியாத ஹிந்தி – சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டி ஒன்றிய அரசு செய்து வருகின்ற மொழித் திணிப்புக் கொடுமை, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைத் திட்டங்கள் ஆகியன பற்றி விளக்கமாக உரையாற்றினார்.
நிறைவாக சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சிதம்பரம் கழகப் பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கியும், நீட்டுக்காக இந்திய அளவில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவச் சமுதாயத்தினரின் தற்கொலைகள் பற்றியும், இந்தியாவுக்கே முன் மாதிரியாகத் திகழுகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மூலம் நிறைவேற்றி வருகின்ற மக்கள் நலத் திட்டங்கள் பற்றியும், “பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்” என்னும் அளவுக்கு ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்து தந்தை பெரியாரது கொள்கைகளைப் பரப்புரை செய்து வரும் தமிழர் தலைவரின் அயர்விலாப் பணிகள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
வடசென்னை மாவட்ட இளை ஞரணி சார்பில் நடைபெற்ற இக்கூட் டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சாலைகளின் இரு மருங்கிலும் கழகக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன. கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும், அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டனர்.
பங்கேற்றோர்
காரைக்குடி என்னாரெசு பிராட்லா, மாவட்ட அமைப்பாளர் சி.பாசு கர், மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் த.பரிதின், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ரெ.யுவராஜ், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, கண்ணதாசன் நகர் கழக தலைவர் கு.ஜீவரத்தினம், அமைப்பாளர் க.துரை, அயன்புரம் அமைப்பாளர் சு.துரைராசு, மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு, எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, முத்தமிழ் நகர் கழக அமைப்பாளர் வி.இரவிக்குமார், அ.செந்தமிழ்தாசன், சிற்றரசு, அ.புகழேந்தி, செம்பியம் கழக தலைவர் ப.கோபாலகிருட்டிணன், கொளத்தூர் கழக அமைப்பாளர் ச.இராசேந்திரன், உடுமலை வடிவேல், க.கலைமணி, கே.கலைச்செல்வன், பட்டாளம் பன்னீர், க.செல்லப்பன், நா.கருணாநிதி, திமுக தோழர்கள் வெ.நல்லதம்பி,
ஆர்.சண்முகசுந்தரம், திராவிட மகளிர் பாசறை த.மரகதமணி, மு.பவானி, ப.கலைச்செல்வி, எஸ்.சரண்யா, கே.எஸ்.வெண்பா, த.இனியா, க.ஞானதேவி மற்றும் பல கழகத் தோழர்களும், இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிறைவாக மாவட்ட துணைச் செய லாளர் வ.தமிழ்செல்வன் நன்றி கூறினார்.