அரியலூர், ஜூலை 4- அரியலூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.7.2023 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு அரியலூர் சிவக் கொழுந்து இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மு.முத்தமிழ் செல் வன் கடவுள் மறுப்பு கூறினார்.மாவட்ட செயலாளர் மு. கோபால கிருஷ்ணன்,மாவட்ட அமைப்பா ளர் இரத்தின இராமச்சந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் பொதுக்குழு தீர்மானங் களை விளக்கியும் இயக்கப் பணி கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்
ஈரோட்டில் நடைபெற்ற கழ கப் பொதுக்குழுவின் தீர்மானங் களையும் அதே போல உளுந் தூர் பேட்டையில் நடைபெற்ற கலந் துரையாடலில் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்களை யும் ஏற்று சிறப்பாக ஒன்றியத்தில் கழக வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்வதென தீர்மானிக்கப்படு கிறது.
வைக்கம் போராட்ட நூற் றாண்டு விழா கலைஞர் நூற் றாண்டு விழா சிறப்பு தெருமுனை கூட்டங்களை அரியலூர் ஒன்றி யத்தில் நடத்திடுவதெனவு’ம் முதல் கூட்டத்தினை விளாங்குடியில் நடத்திடவும் முடிவு செய்யப்பட் டது.
திராவிடர் கழகத்தின் இலட்சிய கொடியை கிளைக் கழகம் தோறும், கழகத் தோழர்களின் இல்லந்தோ றும் ஏற்றுவதெனவும் சுற்றுச் சூழலை காக்க செடி நடுவது என் றும், இன மானம் காக்கும் விடு தலை நாளேட்டை தினமும் படித்து பரப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டது. அரியலூர் ஒன் றிய கழக செயலாளராக ஓட்டக் கோவில் த. செந்தில் நியமிக்கப்பட் டார்.
பங்கேற்றோர்
மாவட்டத் துணைச் செயலா ளர் மா. சங்கர்,மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் க. செந்தில் அரியலூர் ஒன்றிய தலைவர் சி. சிவக்கொழுந்து ஒன்றிய துணைத் தலைவர் மு. மருதமுத்து ,நகர செயலாளர் கு. தங்கராசு அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க. மணிகண்டன்,செயலாளர் சி கம லக்கண்ணன். ஒட்டக்கோவில் செந் தில், ஆண்டிமடம் ப. சுந்தர மூர்த்தி ,வீராக்கன்வெற்றிச்செல்வன், விமல் ராஜ் ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பாக பங்கேற்றனர்.