2025 ஏப்ரல் 16 அன்று, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாவின் கோரிக்கையை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். இந்த மண்டபம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் இலக்கிய மற்றும் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.